ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கொரானா பெருந்தொற்று வாரம்.
ராணிப்பேட்டை ,வாலாஜா, ஆற்காடு ஆகிய நகராட்சிகள் இணைந்து கோவிட் விழிப்புணர்வு இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஆனந்தன் வரவேற்றார் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஏ. ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு கொரானா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்க வேண்டும் நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான அறிவுரை வழங்கினார். 

கொரானா 3 வது அலையை கட்டுப்படுத்த உங்களையும் உறவினர்களையும் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் சோப்பினால் அடிக்கடி கை கழுவ வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கி கொரானா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக நாம் மாற்ற வேண்டும் மேலும் இதில் மாவட்ட சுகாதார அலுவலர் வீராசாமி வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி விமலா ஆகியோர் பங்கேற்றனர் பின்னர் மாவட்ட ஆட்சியர் கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து கொரானா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆட்சியர் வழங்கினார். 
பின்னர் கோவிட் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர் நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான வருவாய்த்துறையினர் மருத்துவத் துறையினர் பொதுமக்கள் பங்கேற்றனர்