ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட ஜெய்பீம் நகர் முதல் மாதவ நகர், காந்தி நகர் வழியாகப் புதிய பஸ் நிலையம்வரை செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் அப்பகுதி சாலையினை புதுப்பித்துத் தரவில்லை.
இதனால் இரவு நேரங்களில் மின் கம்பங்களில் உள்ள லைட் எரியாததால் இரவு நேரத்திலும் மற்றும் மழையின் போதும் அவ்வழியே வரும்போது முதியோர், குழந்தைகள் எனக் கால் இடறி கீழே விழுந்து காயங்களுடன் செல்ல நேரிடுகிறது எனக் கூறி அரக்கோணம் நகராட்சி வாயில் முன்பு இவைகளை உடனே சீரமைத்து தர வேண்டும் எனக் கூறி அப்பகுதி பெண்கள் மற்றும் அரக்கோணம் நகர பாஜக பட்டியல் அணி தலைவர் டி ஆர் ஆர் ரவி ஆகியோர் பாஜக மாவட்ட பட்டியல் அணி துணைத்தலைவர் இன்பா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.
அப்போது நகராட்சி மேலாளலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து ஆணையரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது இதனையடுத்து அவர்கள் கோரிக்கையினை மனுவாக அளித்துக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.