ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா இரண்டாம் அலையை முடிவடைந்ததைத் தொடர்ந்து மூன்றாம் அலையில் இருந்து மக்களை நோயிலிருந்து காத்திட ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று வாலாஜா வட்டாட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பேருந்துநிலையத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
இந்த விழிப்புணர்வில் முதலில் முககவசம் அணிந்து மக்களா எல்லோரும் வெளியே வர வேண்டும் கட்டாயம் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் வீட்டிற்க்குள் செல்லும் போது சோப்பு அல்லது சனிடைசர் கொண்டு கைகால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் மக்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
இதில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.