அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மதுசூதனன் (வயது 80) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.