ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரமேஷ் , சங்கர்மேஸ்திரி. , வையாபுரி , பிரகாசம் , குமுதா ஆகியோர் தலைமை வகித்தனர். ராமச்சந்திரன் சாம்பசிவம் பன்னீர்செல்வம் ஆறுமுகம் அன்பழகன் எல் சி மணி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள் மேலும் இதில் 3 வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய் , பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்து , கொரானா முடக்கத்தால் வேலை இழந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பினர்