ராணிப்பேட்டை, திருப்பதி - கன்னியாகுமரி சாலை அமைக்க நிலம்‌. வழங்கிய விவசாயிகளுக்கு. வெளிச்‌சந்தை மதிப்‌பில்‌ இழப்பீடு தொகை வழங்க வேண்டும்‌ என்று: ராணிப்பேட்டை டி.ஆர்‌ஓ. ஜெயசந்திரனிடம்‌ தமிழக விவசாயிகள்‌ சங்கத்தினர்‌. நேற்று மனு அளித்தனர்‌.

அந்த மனுவில்‌ கூறி யிருப்பதாவது: ராணிப்‌பேட்டை மாவட்டம்‌. நெமிலி தாலுகாவில்‌ அமைய உள்ள திருப்பதி - கன்னியாகுமரி சாலை இட்டத்தின்‌ ஒரு பகுதியாக அரக்கோணம்‌, புறவழி சாலையானது. தணிகைபோளூர்‌ முதல்‌ தக்கோலம்‌ கூட்ரோடு வரை அமைய உள்ளது. புதிய சாலை அமைக்க 100 அடி வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தை நடந்து வருகறது.

இந்நிலையில்‌, இந்த திட்டம்‌ தொடர்பாக எந்த கிராமத்திலும்‌ கருத்து கேட்பு கூட்டம்‌ நடத்தவில்லை. இந்த இட்டம்‌ அறிவிக்கப்பட்‌டபோது சந்தை மதிப்பு விட அதிக இழப்பீடு நிலத்திற்கு தருவதாக: தெரிவிக்கப்‌பட்டது சென்னை- பெங்களூரு, விரைவு சாலைக்கும்‌. இதர நெடுஞ்சாலை திட்‌டங்களுக்கும்‌ வேலூர்‌ மாவட்டத்தில்‌ விமான நிலையம்‌ அமைக்க இது வரை சந்தை மதிப்பில்‌: 4 மடங்கு வழங்கியுள்ளனர்‌. தி ருமால்பூரில்‌ 1 ஏக்கர்‌ ₹1 கோடி வரையும்‌ அரசு நிலம்‌ வாங்கி உள்ளது. தக்கோலம்‌ கூட்‌ரோடு அருகே 1 ஏக்கர்‌ சுமார்‌ ₹30 ஆயிரத்திற்கு அரசு கேட்கிறது.

'இதனால்‌, இலுப்பை தண்டலம்‌, சீழாந்துரை, நாகவேடு, பரித்திபுத்தூர்‌, மேல்பாக்கம்‌, கைனூர்‌, தணிகைபோளூர்‌ பகுதிகளைச்‌ சேர்ந்த 500 விவசாயிகளின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்டுள்ளது எனவே, திருப்பதி- கன்‌னியாகுமரி சாலை திட்‌ டத்தில்‌ வெளிச்சந்தை மதிப்பில்‌ 4 மடங்கு அதிகப்படியாக 1 சதுரடிக்கு. ₹1,000 இழப்பீடு வழங்க வேண்டும்‌. இவ்‌வாறு. அந்த மனுவில்‌ கூறப்பட்‌டிருந்தது.

மனுவை பெற்றுக்‌ கொண்ட டிஆர்ஓ ஜெயச்சந்திரன்‌ உறிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்‌.