தபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள்
வணக்கம் நண்பர்களே. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் உள்ள ஒன்பது அற்புதமான சேமிப்பு திட்டங்கள் இங்கு நாம் தெரிந்து கொள்வோம். இந்திய தபால் துறை, வங்கிகளை போன்று, பொது மக்களுக்கு பலவகையான சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது.
அதாவது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் பொது மக்களின் பயனுக்கு வழங்கி வருகின்றன.
அதிலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் (PPF), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது.
சரி இப்பொழுது தபால் நிலயத்தில் (post office savings scheme in tamil 2020) வழங்கப்படும் ஒன்பது வகையான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம் வாங்க.
தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு / Post Office Savings Account:
தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் தபால் அலுவலகம் 4 சதவீதம் வட்டியினை தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும்.
சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.
மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.
ஐந்து வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் / 5-Year Post Office Recurring Deposit Account (RD):
தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5.8% சதவீதம் வட்டி விகிதம் அளிக்கிறது.
குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் எனவும் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடர தபால் துறை அனுமதி அளிக்கிறது.
இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த சேமிப்பு திட்டத்திலும் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.
போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கு:
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பது எப்படி? தபால் அலுவலக டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
தற்போது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் எப்படி அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம்.
வருட கணக்கு: 5.5%
வருட கணக்கு: 5.5%
வருட கணக்கு: 5.5%
வருட கணக்கு: 6.7%
அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80C கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டத்திலும் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.
தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு / Post Office Monthly Income Scheme Account (MIS):
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்:- தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 6.6% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.
ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம்.
ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் / Senior Citizen Savings Scheme (SCSS):-
55 வயது முதல் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேமிப்பு கணக்கை துவங்கலாம். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கினை குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 வருடம். ஆண்டுக்கு 7.4% வட்டிஅளிக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் / 15 year Public Provident Fund Account (PPF)
PPF என்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் தொகையாக ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக அல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.
பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் முடிவடைந்த பிறகு மேலும் சேமிப்பு கணக்கை தொடர வேண்டும் என்று விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டித்து கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் / National Savings Certificates (NSC):-
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 6.8% வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இந்த திட்டத்தில் தாங்கள் குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
உதாரணத்திக்கு இன்று 1000/- ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 1389.49 ரூபாய் கிடைக்கும். வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் / Kisan Vikas Patra (KVP)
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுக்கு 6.9% வட்டி விகித லாபத்தினை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 124 மாதம் அதாவது 10 வருடம் 4 மாதம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்று ஏதும் இல்லை. பெரியவர்கள் அல்லது மைனர் என யார் பெயரில் வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் தாங்கள் குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
Sukanya Samriddhi Accounts:-
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்த செல்வ மகள் திட்டம் இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும்.
இந்தத் திட்டத்தில் தற்போது 7.6% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்