ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி. மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்' என்ற புதிய மருத்துவ சிகிச்சை திட்டத்தை தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கொடைக்கல் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
துவக்க விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவர் அசோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள், மருத்துவத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.