வாட்ஸ்அப் சமீபத்தில் ஒரு புதிய அம்சம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ்அப் செயலி எல்லா வயதினராலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் 8 பேருடன் வீடியோ காலில் பேசும் வகையிலான புதிய ஜாயின் கால் (Join call) வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயனாளி ஒருவர் உரையாடலின் நடுவே வெளியேறினால் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். இந்தப் புதிய அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் வெளியேறிய பின் மறுபடியு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கம் Tap to join மூலம் இணைந்து கொள்ளலாம். வேண்டுமானால் வீடியோ காலை தவிர்க்க Ignore ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளுக்கு மட்டுமின்றி வாய்ஸ் அழைப்புகளுக்கும் இந்த அப்டேட் பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.