👉 1923ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய எழுத்தாளர் ஜி.ஏ.குல்கர்னி பிறந்தார். 

👉 வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் :1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.


பிறந்த நாள் :-

சுனில் கவாஸ்கர்
👉 உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் 1949ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

👉 இவர் 1966,67ல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 1975,76ல் நடந்த போட்டியின் 2, 3,வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் எடுத்தார்.

👉 இவர் மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை உட்பட 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

👉 பத்மபூஷண், அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்த இவர் 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


ஆலிஸ் ஆன் முன்ரோ
👉 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ 1931ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.

👉 இவரது முதல் நூல்கள் தி டைமன்ஷன்ஸ் ஆஃப் ஏ ஷாடோ (The Dimensions of a Shadow), டான்ஸ் ஆஃப் தி ஹாப்பி ஷேட்ஸ்(Dance of the Happy Shades) முதல் கதை தொகுப்பாகும். தொடர்ந்து பல்வேறு பிரபலமான பத்திரிகைகளில் இவரது நூல்கள் வெளிவந்தன.

👉 இவர் கனடாவின் புனைக்கதைகளுக்கான ஆளுநர் விருதை (Governor General's Award)) மூன்று முறையும், மான் புக்கர் விருது (Man Booker), ஓ ஹென்றி விருது, எட்வர்ட் மெக்டோவெல் பதக்கம், டபிள்யு.ஹெச்.ஸ்மித் இலக்கிய விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

👉 புனைக்கதையின் மிகப்பெரிய எழுத்தாளர் என்றும், கனடாவின் செக்கோவ் (Chekhov) என்றும் புகழப்பட்ட ஆலிஸ் ஆன் முன்ரோ இன்று 88வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.