👉 1687ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற Principia Mathematica (Mathematical Principles of Natural Philosophy) என்ற நூலை வெளியிட்டார். 

👉 1996ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டியான டோலி என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.


பிறந்த நாள் :-

பாலகுமாரன்
✍ தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் 1946ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமானேரி என்னும் சிற்றூரில் பிறந்தார்.

✍ இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும், இவர் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

✍ ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்), இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு) மற்றும் கலைமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 

✍ தன்னுடைய எழில்மிகு கற்பனைத் திறனால், எழுத்து மற்றும் திரைத்துறையில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பெற்ற இவர், தனது 71வது வயதில் (2018) மறைந்தார். 


எர்னஸ்ட் வால்டர் மயர்
👉 20ஆம் நூற்றாண்டின் பரிணாமவியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் வால்டர் மயர் (Ernst Walter Mayr) 1904ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

👉 இவர் சிறுவயதிலிருந்தே பறவையியலில் ஆர்வம் கொண்டிருந்ததால் பல அரிய பறவை இனங்களையும் எளிதாக அடையாளம் காட்டி விடுவார். 

👉 இவர் தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார். 1942-ல் உயிரினங்களின் மரபியல், பரிணாம தொகுப்புகள் தொடர்பான இவரது முதல் புத்தகம் வெளிவந்தது.

👉 இவர் மொத்தம் 25 புத்தகங்களை எழுதியுள்ளார். தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும், உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன.

👉 பன்முகப் பரிமாணங்களை கொண்ட எர்னஸ்ட் மயர் தனது 100வது வயதில் (2005) மறைந்தார்.