குறள் : 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.
மு.வ உரை :
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
கலைஞர் உரை :
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.
சாலமன் பாப்பையா உரை :
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
Kural 460
Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin
Allar Patuppadhooum Il
Explanation :
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
இன்றைய பஞ்சாங்கம்
29-07-2021, ஆடி 13, வியாழக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.55 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.02 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 29.07.2021
மேஷம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.
மிதுனம்
இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கடகம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,