குறள் : 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
மு.வ உரை :
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
கலைஞர் உரை :
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
Kural 468
Aatrin Varundhaa Varuththam Palarnindru
Potrinum Poththup Patum
Explanation :
The work which is not done by suitable methods will fail though many stand to uphold it.
இன்றைய பஞ்சாங்கம்
06-08-2021, ஆடி 21, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி மாலை 06.28 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 06.37 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 06.08.2021
மேஷம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நபர் அறிமுகம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். போட்டி பொறாமைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.