குறள் : 466
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

மு.வ உரை :
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான் செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

கலைஞர் உரை :
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை :
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

Kural 466
Seydhakka Alla Seyak Ketum Seydhakka
Seyyaamai Yaanung Ketum

Explanation :
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.




இன்றைய பஞ்சாங்கம்
04-08-2021, ஆடி 19, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 03.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 04.08.2021

மேஷம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

ரிஷபம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். 

மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி
இன்று வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.

துலாம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். பகல் 03.07 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. 

மீனம்
இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,