ராணிப்பேட்டை: அரக்கோணத்தில், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர், மேரி, 32. இவர் அதே பகுதியில் உள்ள சிஎஸ்.ஐ., பள்ளியில் 2000ம் ஆண்டு முதல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவரது கல்வி சான்றிதழை பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்தது. அதில், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குறைந்த மதிப்பெண் இருந்ததால் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அதிக மதிப்பெண் பெற்றதாக போலியாக சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக காட்டி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியையாக பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், ஆசிரியை மேரியை இன்று (ஜூலை 29) சஸ்பெண்ட் செய்தார். பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுத்த புகார்படி அரக்கோணம் போலீசார் மேரி மீது வழக்கு பதிவு செய்தனர்.