திருத்தணியில் இருந்து தனியார் தொழிற்சாலை பேருந்து திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் உள்ள 22க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிக் கொண்டு தொழிலாளர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற போது இன்று விடியற்காலை 4 மணிக்கு அரக்கோணம் வின்டர்பேட்டை அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலை மேம்பாலம் அருகே போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. விசாரணையில் பேருந்தை திருத்தணியை சார்ந்த ஓட்டுநர் ஓம்பிரகாஷ் (40)ஓட்டி வந்ததும்.
தூக்க கலக்கத்தில் பேரூந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. பேருந்தில் இருந்த கைனூரை சேர்ந்த பிரேம்குமார் (41), கங்கைமோட்டூரை சார்ந்த மதன்(37) , திருத்தணியை சார்ந்த தனகோட்டி(55), அரக்கோணம் சுவால்பேட்டை சார்ந்த கோபி(26), திருத்தணி அடுத்த பி. ஆர். பள்ளியை சார்ந்த தயாளன் (30) ஆகிய தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்கப்பட்டனர்.
மேலும், ஆணைபாக்கத்தை சார்ந்த சந்திரசேகர்(37) மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.