ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ அரக்‌கோணம்‌ மற்றும்‌ நெமிலி தாலுகாவில்‌ நகர்ப்புறத்‌இல்‌ ஓராண்டும்‌ மற்றும்‌: இராமப்புறத்தில்‌ 3 ஆண்‌டுகாலம்‌ தொடர்ந்து, பணியாற்றி வந்த விஏஓக்களுக்கு பணி மாறுதல்‌ தொடர்பான, கலந்தாய்வு கூட்டம்‌. அரக்கோணத்தில்‌ ஆர்‌ டி.ஓ சிவதாஸ்‌ தலைமையில்‌ நேற்று நடந்தது. 

இதில்‌, அரக்கோணம்‌ மற்றும்‌ நெமிலி தாலுகாவைசேர்ந்த விஏஓக்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌. அப்போது, பல்வேறு வருவாய்‌ இராமங்களில்‌ பணியாற்றுவதற்காக விஏஓக்கள்‌ விருப்பம்‌ தெரிவித்தனர்‌. விஏஓக்களின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ ஆர்டிஓ அவற்றை பரி சீலனை செய்து பணி மாற்றம்‌ செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்‌கொண்டார்‌. 

இந்நிலையில்‌, அரக்‌கோணம்‌ தாலுகாவில்‌ 16 விஏஓக்களும்‌, நெமிலி தாலுகாவில்‌ 18 விஏஓக்‌களும்‌ என மொத்தம்‌ 34 விஏஓக்கள்‌ பணியிட மாற்றம்‌ செய்யப்படுகின்‌றனர்‌. இதற்கான உத்தரவினை ஆர்டிஓ சிவதாஸ்‌ இன்னும்‌ ஓரிரு நாட்களில்‌ வழங்க உள்ளார்‌.

அரக்கோணம்‌, தக்‌கோலம்‌, நெமிலி, காவேரிப்பாக்கம்‌, பனப்பாக்‌கம்‌ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்‌ சேர்ந்த விஏஓக்கள்‌ பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்படுகின்‌றனர்‌ என்பது குறிப்பிடத்‌தக்கது. அரக்கோணம்‌, மற்றும்‌ நெமிலி தாலுகாவில்‌ ஒரே நேரத்தில்‌ 34 விஏஓக்கள்‌ பணியிட மாற்றம்‌ செய்யப்படுவது, வருவாய்துறையினர்‌ மத்‌தியில்‌ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.