ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவிலிருந்து இராணிப்பேட்டை நோக்கிக் கார் ஒன்று வேகமாக வந்தது. அப்போது ஆட்டோ நகர் அருகே சென்றபோது திடீரென காரின் பின் சக்கரம் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கார் டிரைவர் சாலையின் இடது பக்க ஓரமாக உள்ள வேப்ப மரத்தருகே காரை நிறுத்தினார். அப்போது பிஞ்சு ஜெயராம் நகரை சேர்ந்த சக்திவேல் 60 என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார் பிறகு சாலையோரத்தில் இருந்த காரைச் சற்றும் எதிர்பாராமல் கார்மீது மோதியது.

 இதில் காரில் இருந்த பின் கண்ணாடி வெடித்தது இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பலத்த காயமடைந்து சாலையில் மயங்கிக் விழுந்தார் பிறகு உடனே ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள படுக்கும் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இந்த விபத்துகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ‌ விசாரணை செய்து வருகின்றனர்.