ராணிப்பேட்டை: பொதுமக்கள் தங்களது குறைகள், புகாா்களை 9489829964 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
இனி வருங்காலத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் புதிய கட்செவி அஞ்சல் எண்ணுக்குத் தங்களது குறைகள், புகாா்கள் குறித்து குறுஞ்செய்திகள், படங்கள், காணொளிகளை பொதுமக்கள் ஆதாரங்களோடு அனுப்பலாம் என்றாா்.