ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் சுற்றியுள்ள கிராம மக்கள் வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கல்லூரிக்குச் செல்பவர்கள் எனப் பலரும் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 

இதனால் அரக்கோணம் மற்றும் திருமால்பூர் ஊர்களுக்கு பஸ்ஸில் சென்று அங்குள்ள ரயில் நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய நிலையிலேயே உள்ளது. மேலும் சரியான நேரத்தில் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு பஸ் கிடைக்காமல் வேலைக்கும், கல்லூரிக்கும் செல்பவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க கூடிய நிலை ஏற்படுகிறது. 

எனவே இது போன்ற இன்னல்களைத் தவிர்க்கக் கிராம மக்கள் பயனடையும் வகையில் சேந்தமங்கலத்தில் ரயில் நிலையம் அமைத்துத் தர வேண்டும் எனத் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கும் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.