வேலூர்: ரத்தினகிரி அருகே உயர்மின் அமுத்த கம்பியில் அணில் உரசியதால், மின் கம்பி அறுந்து விழுந்து. மூதாட்டி பலியாகினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் கிராமத்தை சாரதா. (68),இவரது வீட்டிற்கு வெளியே உள்ள மின் கம்பத்தில், உயர்மின் அழுத்தக் கம்பி செல்லும் பாதையில் அணில் உரசியதால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. 

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டிலிருந்து சாரதா மற்றும் அவரது பேரப்பிள்ளைகள் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுவதைக் கண்ட சாரதா தன் பேரன்களை வீட்டிற்குள் தள்ளிவிட்டு காப்பாற்றியுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்கம்பி விழுந்ததால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

உயிரிழந்த சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் இந்த சம்பவம் குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.