ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை உள்ள‌ கச்சால நாயக்கர் தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முனீஸ்வரருக்கு 5ம் ஆண்டு ஆடிமாத திருவிழா சிறப்பாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் கோவிலில் உள்ள முனீஸ்வரருக்கு பூ மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு பக்தர்கள் முனீஸ்வரருக்கு அசைவம் வைத்து படையல் இட்டனர்.

இதில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் மீதும் சாமி வந்து ஆடி அருள் வாக்கு கூறினர் பிறகு பக்தர்கள் ஆடு கோழி ஆகியவை கொண்டு பலி கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர் அப்போது கோயில் உள்ளே இருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த ஆடி மாத திருவிழாவை ஏற்பாடு செய்த கோயில் தர்மகர்த்தா நாட்டாமைதாரர்கள் மற்றும் இளைஞர்கள் என திரளானோர் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு முனீஸ்வரன் அருளைப் பெற்றுச் சென்றனர்.