ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்கள் சாலை விபத்தில் குறைக்கும் விதத்தில் கருடா இருசக்கர வாகன ரோந்து பணி அறிமுகம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும் பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கருடா வாகன ரோந்து பணியினை ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டையில் கருடா வாகன ரோந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைக்குள் 26 இருசக்கர வாகனங்கள் மூலம் எல்லைக்குள் நிர்ணயிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சிமுறையில் வந்து செல்வர் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் என்றால் 9498180972 என்று எண்ணினை தொடர்பு கொண்டால் 5 நிமிடத்திற்குள் சம்பவ இடம் செல்வதற்கு கருடா வாகன ரோந்து ஏதுவாக இருக்கும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் K. T பூரணி , காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சமூக இடைவெளியுடன் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாவில் கலந்து கொண்டனர்