அரக்கோணத்தில், வீட்டு பூட்டை உடைத்து 47 பவுன் நகை, எட்டு கிலோ வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தணிகை போளூர் நாகலேஷ் நகரை சேர்ந்தவர் லவக்குமார், 40. கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியற்றி வருகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்தே ஆன்லைனில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் உள்ள உறவினரை பார்க்க வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 15 ம் தேதி சென்றார்.நேற்று இரவு 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தில், பீரோவில் இருந்த 47 பவுன் நகை, எட்டு கிலோ வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய், சொத்து ஆவணங்கள் திருட்டு போனது தெரியவந்தது. 

அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.