வாலாஜா-திருத்தணி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (53), முன்னாள் ராணுவ வீரர். நேற்று முன்தினம் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது தனது வீட்டில் உள்ள டேங்குக்கு தண்ணீர் ஏற்ற அங்கிருந்த மின் மோட்டாரை சுப்பிர மணி இயக்கினார்.

அப்போது மின்சுவிட்சில் இருந்து மின் சாரம் சுப்பிரமணி மீது பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டார். இதில், மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தி னர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியி லேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி தேன் மொழி கொடுத்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.