ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏடிஎம்பழனிப்பேட்டை பகுதியில் உள்ளது. அங்கு, பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சில சென்றுள்ளனர். அவர்கள், கதவு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மின்சாரம் பாய்ந்து உள்ளது. 

இதனால், வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், மின்வாரிய ஊழியரை அழைத்து வந்து சோதனை செய்தபோது, ஏடிஎம் பகுதியில் எங்கு தொட்டாலும் மின்சாரம் பாய்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டது. மேலும், முறையாக ஏடிஎம்கள் பராமரிக்கப்படாததாலும், காவலாளிகள் நியமிக்கப்படாததாலும் இதுபோன்று ஆபத்தான செயல்கள் நிகழுகிறது. இதையடுத்து, ஏடிஎம் சுற்றிலும் பல்வேறு தடுப்பு வேலிகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏற்படுத்தினர்.