ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண். இவர்‌ சென்னையில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி பிளஸ்2 படித்து வந்தார்.
 
பள்ளி விடுமுறை என்பதால் ரத்தினகிரி அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வீட்டிலிருந்தவர் திடீரென காணவில்லையாம். இதனால் குடும்பத்தினர் பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ‌‌

இதுபற்றி பெண்ணின் தாய் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.