ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரானா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரானா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாற்று திறனாளிகள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜி கே உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி , வாலாஜா தொழிலதிபர் குளோபல் டைல்ஸ் அக்பர் ஷரிப் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மேலும் இதில் ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா கலைராஜன் பிரபு , சதீஷ் , பால் சத்யன் , உதவும் உள்ளங்கள் திருப்பதி கண்ணன் , ரகுராமன் ஆகியோர் பங்கேற்றனர் இதில் ஏராளமான திமுக உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.