வாலாஜாவில் ராமர் சீதா திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

வாலாஜாவில் ராமர் சீதா திருக்கல்யாணம் நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் ராமர் சீதா திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று 12ம் ஆண்டு திருக்கல்யாணம் நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 23ம் தேதி குத்து விளக்கு பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கிருஷ்ணாபுரம் ராம சுப்ரமணியன் குழுவினரின் தோடயமங்கலம், குருகீர்த்தனை, அஷ்டபதி ராமசரிதம் உள்ளிட்ட பஜனைகளும், விஷ்ணு சகஸ்ர பாராயணமும் நடந்தது. தொடந்து, நேற்று உஞ்சவிருத்தியும், மாங்கலயதாரணம் நடை பெற்றது. பின்னர், குழந்தைகள் சார்பில் பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டது.