ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசினர் வரவேற்பு இல்லத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் தொழில் நுட்ப பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் வரவேற்பு இல்லத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தொழில் நுட்ப அலுவலர், தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இதில், தொழில் நுட்ப அலுவலர் பணிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில் தொடர்பு பொறியியல், மின்னணு மற்றும் மின்னியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொகுப்பூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில் தொடர்பு பொறியியல், மின்னணு மற்றும் மின்னியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதிய மாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இரண்டு பிரிவுக்கும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://ranipet.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் வரும் 27-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, சுற்றுலா மாளிகை, வேலூர்-632001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.