பாகவெளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைப் பயிா்களில் அடா் நடவு முறை பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆத்மா திட்டத்தின்படி, வாலாஜா வட்டார வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தோட்டக்கலை பெயா்களில் அடா்நடவு முறை என்ற தலைப்பில்,இணைய வழியிலான பயிற்சி வகுப்பு பாகவெளி கிராமத்தில் நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குநா் வேலாயுதம் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் கலா வரவேற்றாா்.

இதில், விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா் நந்தகுமாா், உதவிப் பேராசிரியா் நல்லகுரும்பன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் வெங்கடேசன், உதவி தொழில்நுட்ப மேலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.