வாலாஜா வெங்கட்ராம பாகவதர்‌ 'தெருவை சேர்ந்தவர்‌ சரஸ்வதி(56). இவர்‌ தனது பூஜை. அறையில்‌ வைத்து இருந்த ₹5ஆயிரம்‌ மதிப்புள்ள 12 குத்துவிளக்குகளை நேற்று முன்தினம்‌ துலக்கி வாசலில்‌ காய வைத்தார்‌. சிறிது நேரம்‌ கழித்து வெளியில்‌ வந்து பார்த்தபோது குத்துவிளக்குகள்‌ திருடுபோனதையறிந்து அதிர்ச்சியடைந்தார்‌.

இதுகுறித்து சரஸ்வதி வாலாஜா போலீசில்‌ புகார்‌ அளித்தார்‌ அதன்‌ பேரில்‌ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்‌.

இந்நிலையில்‌ வாலாஜா அடுத்த வீசிமோட்டுர்‌ கிராமத்தில்‌ நேற்று போலீசார்‌ வாகன தணிக்கை செய்தனர்‌. அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த. ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்‌. விசாரணையில்‌ அவர்‌ அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்‌(25) என்பதும்‌ குத்துவிளக்கை திருடியவர்‌ என்பதும்‌: தெரியவந்தது இதையடுத்து அவரிடம்‌ இருந்த ₹5 ஆயிரம்‌ மதிப்புள்ள 12 குத்துவிளக்ககுகளை பறிமுதல்‌ செய்தனர்‌ மேலும்‌ அவரை கைது செய்து சிறையில்‌ அடைத்தனர்‌.