தமிழகத்தின்‌ பல்‌வேறு மாவட்டங்களிலும்‌. கடந்த சில நாட்களாக மிதமானது முதல்‌ பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, ராணிப்‌பேட்டை மாவட்டத்தின்‌. பல்வேறு இடங்களிலும்‌. நேற்று முன்தினம்‌ மாலை முதல்‌ வானம்‌ மேக மூட்டம்‌ காணப்பட்டு குளிர்‌காற்று வீசத்தொடங்கியது.

இந்நிலையில்‌ மாலை 6.30 மணியளவில்‌ சாரல்‌ மழை பொழிந்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன்‌ பலத்த மழையாக மாறியது. நேற்று முன்தினம்‌. மாலையில்‌ தொடங்‌கிய மழையானது இரவு முழுவதும்‌ நீடித்து நேற்று: காலை 7 மணியளவில்‌ நின்றது.

சுமார்‌ 12 மணி நேரத்‌இற்கும்‌ மேலாக பெய்த மழையால்‌ சாலைகளில்‌ மழைநீர்‌ வெள்ளம்‌. பெருக்கெடுத்து ஓடி கால்‌ வாய்கள்‌ வழியாக, குளம்‌, குட்டைகளில்‌ தேங்கியது.

மேலும்‌, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்நிறுத்தம்‌ செய்யப்பட்‌டதால்‌ அசம்பாவிதங்கள்‌ ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக பகல்‌ நேரங்களில்‌ வெயில்‌ சுட்டெரித்து வரும்‌ நிலையில்‌, இரவு நேரங்களில்‌: அவ்வப்போது பெய்து வரும்‌ மழையின்‌ காரணமாக பொதுமக்கள்‌ ம௫ழ்ச்சி அடைந்தனர்‌.

அதேபோல்‌, அரக்‌கோணம்‌, காவேரிப்‌பாக்கம்‌, சோளிங்கர்‌, ஆற்காடு, கலவை உள்‌ளிட்ட இடங்களிலும்‌. பரவலாக மழை பொழிந்‌தது. ராணிப்பேட்டை மாவட்டம்‌ வாலாஜா தாலுகாவில்‌ அதிகபட்ச மாக 77.4 மி.மீட்டர்‌ மழை பெய்தது.

ராணிப்‌பேட்டை மாவட்டத்தில்‌ நேற்று முன்தினம்‌ பெய்த மழை அளவு (மி.மீட்டரில்‌), அரக்கோணம்‌- 98, ஆற்‌காடு- 75, காவேரிப்பாக்‌ கம்‌- 74, சோளிங்கர்‌- 15, அம்மூர்‌- 06, கலவை-58.2 பதிவானது. மேலும்‌, மொத்த மழை அளவு. 380.6 மி.மீட்டர்‌ சராசரி மழை அளவு- 84.4. மி.மீட்டர்‌.