ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தேசிய பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் இக்கோட்டையில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோஸ் ஏற்றி வந்த மினிவேன் வன்னிவேடு பகுதியில் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 
இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வாலாஜா போலீசார் மினிவேனில் இறந்து கிடந்த டிரைவரை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.