ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் உட்பட்ட கணபதி தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்தத் தெருவில் சுமார் 20 வருட காலமாக கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாத நிலை உருவாகியுள்ளது இதைப்பற்றி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தோம் அதிகாரிகள் இதுனால் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஆனால் அப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் அப்பகுதி சாலையில் ஒடும் கால்வாயில் தான் தினமும் நடந்து செல்கின்றனர் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது 

எனவே அப்பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பி அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது அப்பகுதி மக்கள் கூறியிருப்பது என்னவென்றால் இந்தப் பகுதியில் 20 வருடமாக கால்வாயும் சாலை வசதியும் குடிதண்ணீர் வசதி கூட இல்லாததால் பெண்கள் சுமார் ஒரு அரை கிலோமீட்டர் போய் குடிதண்ணீர் எடுத்து வருகிறோம் நாங்கள் இதைப்பற்றி நகராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கை இதுனால் வரையிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறார்கள்

ஆகவே எங்கள் பகுதிக்கு கால்வாய் மற்றும் சாலை வசதி குடிதண்ணீர் வசதி ஆகியவை செய்து தராவிட்டால் எங்கள் பகுதியில் இருக்கும் அனைவருமே எங்களுடைய அடையாளமான குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம்‌ கொடுத்துவிட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் அப்பகுதி மக்கள் கூறினர்.