அடைப்படை வசதிகளை செய்து தராத அரக்கோணம் நகராட்சியை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்.

 அரக்கோணம் அசோக் நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக சீரான சாலை வசதி, குடி நீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாகவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதாக கூறி நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுக்கையிட்டபோது நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நகராட்சி ஆணையாளர் ஆசீர்வாதத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுக்கையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.