காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியைச் சேர்ந்தவர் மணி(28). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி எல்லையம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயில் வளாகத்தில் சிலர் தாயம் ஆடியதை பார்த்த மணி தட்டி கேட்டுள்ளார். 

இதனால் அங்கிருந்தவருக்கும், ஓட்டல் கடைக்காரருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (32), ஆபாசமாக பேசி, பீர் பாட்டிலால், கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். 

இதில் பலத்தகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணி நேற்று அவளூர் போலீசில் புகார் அளித்தார். 

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் சக்ரவர்த்தி வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தார்.