ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த காமாட்சியம்மன் உடனுறை பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த ஆலயத்தில் நேற்றிரவு சமூகவிரோதிகள் சிலர் கோயில் உள்ளே மூலஸ்தானத்தில் உள்ள காமாட்சி அம்மன் சிலையை சேதப்படுத்தியும் அம்மனின் ஆடைகளை களைத்தும் மிகவும் அருவருக்கத்தக்க செயல் ஈடுபட்டிருக்கின்றனர்

இந்த சம்பவம் தொடர்ந்து, மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.