காவேரிபாக்கம் அருகே குழந்தையை கொன்று விட்டு தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன்(37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு கீர்த்தி(5), ஹரிதா(3) என இரு குழந்தைகள் உள்ளனர். தயாளன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தினமும் தகராறு நடைபெறுமாம். வெள்ளிக்கிழமை இரவும் இதே போன்று தகராறு நடைபெற்றுள்ளது. 
இதனால் அனைவரும் தூங்கிய பிறகு வெண்ணிலா தனது மகனை வீட்டிலிருந்த நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டு வீட்டின் பின்பக்கம் சென்று அங்கிருந்த மரத்தில் தனது மகளை தூக்கிட்டு விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விடியற்காலை இச்சம்பவம் குறித்து வெளியே தெரியவந்துள்ளது

இது குறித்து அவளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.