புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மரில் (JIPMER-Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடத்தினை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிட விபரங்கள்:

1. சீனியர் ரிசர்ச் ஃபெல்லவ் (Senior Research Fellow)
மொத்த எண்ணிக்கை: பல்வேறு பணியிடங்கள்

கல்வித் தகுதி:

i) அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து M.Sc முதுகலைப் பட்டத்தை Microbiology பாடப்பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) குறைந்தப்பட்சம் 2 ஆண்டுகள் முன் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:
05-08-2021 ன் படி 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பள விகிதம்:

மத்திய அரசின் விதிமுறைப்படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 23,000/- மற்றும் 16% HRA உடன் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 40,600/- வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு முன்பாக கிடைக்குமாறு விரைவு/ பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் வேலை முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசிநாள்: 05-08-2021

1. இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய CLICK HERE

2. இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோடு செய்ய CLICK HERE

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. S. SUJATHA
Professor / Principal Investigator,
ICMR-AMRSN-WGS Project
Department of Microbiology
JIPMER, Puducherry- 605 006.