ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தை சார்ந்த சங்கர் என்பவரின் பசு மாடு அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று மாலை மேய்ந்து கொண்டிருந்தது.

 
அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் உடலை உரசியபோது மின்சாரம் செல்லும் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் கம்பத்தின் மீது உரசிய பசுமீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

உடனே அருகில் இருந்தவர்கள் மின் வாரியத்திற்கு தகவல் தெறிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் தனிகாசலம் விசாரணை நடத்தினார்.