காதல் கணவன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இறந்த கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து தனக்கு நியாயம் வழங்க கோரி இளம்பெண் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(21) , இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயலிங்கம் (26)என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்  என்றாலும் இந்த திருமணத்திற்கு விஜயலிங்கத்தின் தாயார் கிருஷ்ணவேனி ஒப்புக்கொள்ளவில்லை.இதன்காரணமாக அவ்வபோது இவர்களுக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஜயலிங்கம் தனது வீட்டில் தனி அறையில் தனியாக சமைத்து மல்லிகாவுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்தாண்டு குடும்பத்தின் பிரச்னை அதிகரிக்கவும் மல்லிகா மகளிர் காவல்நிலையத்தில் விஜயலிங்கத்தின் தாய் கிருஷ்ணவேணி  மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் வரதட்சணை கொடுமை அசிங்கமாக பேசுவது , அடிப்பது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு  குடும்பத்தகராறு அதிகரிக்கவே விஜயலிங்கம் மல்லிகா தம்பதியினர் மல்லிகாவின் தாயார் வீட்டிற்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி விஜயலிங்கத்தின் தாயார் விஜயத்திற்கு போன் செய்து நீயும் மல்லிகாவும் வீட்டிற்கு வந்து விடுங்கள் நான் மீண்டும் இதுபோன்று சண்டையிட மாட்டேன் என உறுதி அளித்து வீட்டிற்கு அழைத்துள்ளார். அன்று அவர்களுக்கு கரிவிருந்து படைத்துள்ளார்அன்று மாலையே விஜயகுமாருக்கு சேரவேண்டிய சொத்துக்கும் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கையெழுத்திட சொல்லி விஜயகுமார் மற்றும் மல்லிகாவை நிர்பந்தித்துள்ளார் இதனால் வாய்த்தகராறு கைதகராறாக மாறியுள்ளது.

ஒருகட்டத்தில் விஜயலிங்கம் மல்லிகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இந்தப் பிரச்சினையை சுமுகமாக பேசி முடிக்க கிருஷ்ணாபுரத்திலேயே தங்கி உள்ளார் அன்று இரவு 2 மணி அளவில் மல்லிகாவிடம் போனில் உரையாடியுள்ளார் இந்நிலையில் 22ஆம் தேதி காலை 6 மணி அளவில் விஜய லிங்கம் இறந்துவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்


இதைஅறிந்த மல்லிகா தன் மாமியாரிடம் சென்று  விஜயலிங்கத்தின் மரணத்திற்கான காரணத்தை அறிய முயற்சித்துள்ளார் மல்லிகாவை சரமாரியாக தாக்கிய அந்த குடும்பத்தினர் பின்னர் அவசர அவசரமாக விஜயலிங்கத்தின் உடலை புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.  அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மல்லிகா தன் கணவரின் சாவிற்கு காரணம் அறிய முயற்சித்த போதெல்லாம் அவர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மல்லிகா விஷம் குடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பத்து நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது


தற்போது தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் தனது கணவர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் இயற்கையாக இறந்திருக்க மாட்டார் அதற்கான வயதும் அவருக்கு இல்லை எனவே அவரை திட்டமிட்டு அவரது தாய் கிருஷ்ணவேணி யும் அவரது தம்பி சண்முகராஜன் ஆகியோர் கொலை செய்திருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும் எனவே தனது கணவரின் மரணம் குறித்த காரணத்தை சடலத்தை மீண்டும் தோண்டி பிரேத பரிசோதனை செய்து அதன் வாயிலாக தனக்கு தெரிவிக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Source: News18