ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் வேடந்தாங்கல் செல்லும் சாலையில் சாலைகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 305 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று மிக விமர்சியாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிலாஸ் டோன் புஷ்பராஜ் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கிய வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் அரிகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி. குமார் உதவி பொறியாளர் ரங்கநாதன் பணி மேற்பார்வையாளர்கள் கோபாலகிருஷ்ணன் டிக்கா ராமன் தமிழ்ச்செல்வி சாலை ஆய்வாளர் முருகன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ரேவதி சிவரஞ்சினி பிச்சாண்டி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தீவிரமாக நடும் பணியில் உடனிருந்தனர்.