ராணிப்பேட்டையில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, தொழில் மைய அலுவலகமும் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தொழில் வணிகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், ‘ பொது மேலாளா், மாவட்ட தொழில் மைய அலுவலகம், எண் 5 தேவராஜ் நகா் ராணிப்பேட்டை’ என்ற முகவரியில் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த அலுவலகத்தை கைத்தறி- துணிநூல் துறை அமைச்சா் ஆா் காந்தி, மக்களவை உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோா் திறந்து வைத்து, பயனாளிகளுக்குத் தொழில் கடன் மானியத்துக்கான செயல்முறை ஆணைகளை வழங்கினா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ப.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அலுவலகத்தை 04172-270111, 270222 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தொழில் மைய அலுவலா்கள் தெரிவித்தனா்.