ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சர்வந்தாங்கலில் உள்ள நெல்லியம்மன் கோயில் திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் நாகேந்திரன் (30) நடனம் ஆடிக்கோண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை சிலர் பாட்டிலால் குத்தியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த நாகேந்திரனை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார். 

இது குறித்து ஆற்காடு தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.