அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில்...!!
அமைவிடம் :
💥 அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர், மலுமாச்சம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் வடநாடுகோபுர அமைப்பில் அமைந்துள்ளது.
மாவட்டம் :
💥 அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில், மலுமாச்சம்பட்டி, கோயம்புத்தூர்.
எப்படி செல்வது?
💥 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோயம்புத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து மலுமாச்சம்பட்டிற்கு பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
💥 இத்தலத்தில் பசும்பால் நீலநிறமாக மாறுதல் போன்ற அதிசயிக்க நிகழ்வுகளும் நடைபெறுகின்றது.
💥 இத்தலத்தில் அரைவட்ட தியான மண்டபம், பதினெட்டு சித்தர்கள் பூஜை, புத்தர், திருவள்ளுவர், வள்ளலார், ராமனாந்த சுவாமிகள், சீரடிசாய்பாபா, போகர் சித்தர் முன்மண்டபம் போன்றவையும் அமைந்துள்ளன.
💥 18 படிகள் ஏறி கோயிலுக்கு செல்லும் படி அமைப்பும், 32 அடி உயர மஹா கால பைரவர் சிலையும் அமைந்துள்ளது இங்கு சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது.
💥 பல வருடங்கள் நாகசக்தி அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. எத்தனை வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தாலும், திருமணத்தடை ஏற்பட்டிருந்தாலும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பால் அபிஷேகத்தில் பங்கு பெற்று நமது கையில் கருவறை சென்று பால் அபிஷேகம் செய்து வந்தால் நன்மைகள் கிடைக்கும்.
💥 நிலவேம்பு மூலிகைபால் தருதல் இத்தலத்தில் தான் முதலில் உருவாகியது. அதன்பிறகு நிலவேம்பு கஷாயம் உலகம் முழுவதும் பரவியது.
கோயில் திருவிழா :
💥 பிரதிமாதம் அமாவாசை, சத்ருசம்ஹார பூஜையாகம், சித்திரை பௌர்ணமி, ஆடிவெள்ளி, கார்த்திகை தீபம், மாசிமாதம் 1008 கலச பூஜை, பிரதிவாரம் வெள்ளிக்கிழமை, ஞாயிறு பூஜை நடைபெறுகின்றன.
வேண்டுதல் :
💥 புத்திரபாக்கியம் வேண்டியும், ராகு-கேது தோஷம் நீங்கவும், கடன்தொல்லை, மனவியாதி, திருமணத்தடை, தொழில் விருத்தி, தீராத வியாதிகள் என அனைத்து பிரச்சனைகளுக்காக பிரார்த்திக்கின்றன. இங்கு கூட்டுப்பிரார்த்தனையும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
நேர்த்திக்கடன் :
💥 பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெள்ளியில் கண்அடக்கம், திருமணமுடிந்த பின்பு தாலிகாணிக்கையாக செலுத்தியும், நோய் தீர்ந்த பின்பு எடைக்கு எடை அரிசிதானம் வழங்கியும், சத்ருசம்ஹார யாகத்திற்கு நெய்தானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.