ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை போலீஸ் சப்-டிவிஷன் உள்ளது. இந்த காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஏற்கனவே ரவுடி பட்டியலில் உள்ள நபர்கள், திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட திட்டம் தீட்டும் நபர்கள் மற்றும் சிறை சென்று திரும்பி வந்த நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

இதில் சிலர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடு பட்டு வருவதாக எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்பி உத்தரவின்பேரில் போலீசார் கடந்த 4 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அதில் தொடர்குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.