ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கபிலேஷ்(2) ஆண் குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் நேற்று நள்ளிரவு வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அப்போது கபிலேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைக்கு ஏற்பட்ட காயம் தற்செயலாக ஏற்பட்டது இல்லையெனச் சந்தேகித்த மருத்துவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தந்தை ஆறுமுகம் (27)தாய் கனிமொழி (21) ஆகியோரிடம் குழந்தை மரணம்குறித்து நெமிலி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய்களை வரவழைத்துப் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.