ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சேர்ந்தவர்கள் தினேஷ், கோபி இருவரும் சோளிங்கரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் வேலைசெய்து வருகின்றனர்.

தினேஷ், கோபி இருவரும் கடந்த 10ஆம் தேதி நெமிலியில் நடந்த நண்பரின் திருமணத்திற்குச் சென்றுள்ளார்் பிறகு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் நங்கமங்கலம் புதூர் அருகே சென்ற போது அந்த வழியே மர்ம நபர்கள் 3 பேர் சாலையில் நின்று உதவி கேட்பது போல தினேஷ், கோபி வந்த பைக்கை நிறுத்தினர்.

பின்னர் இருவரிடம் மர்ம நபர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி அவர்களிடம் வைத்திருந்த பணம் மற்றும் 2 செல்போன்களையும் பறித்துவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து தினேஷ் என்பவர் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழிப்பறி செய்த மர்ம நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு மர்ம நபர்களை தேடிவந்த நிலையில் காரப்பக்கம் காவல் ஆய்வாளர் மகாலஷ்மி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் காவல் அதிகாரிகள் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கல் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பைக்கில் சந்தேகிக்கும் வகையில் வந்த 2 பேரை மடக்கி போலீசார் விசாரணை செய்த போது அந்த மர்ம நபர்கள் முன்னுக்கு முரணான பதிலை அளித்த நிலையில் இருவரையும் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அவர்களை விசாரித்தனர்.

பிறகு விசாரணையில் அவர்கள் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த்(22), அரக்கோணம் அடுத்த கும்மிடிபேட்டையைச் சேர்ந்த விஷ்ணு(22) என்பதும் அவர்களுடன் பிரசாந்தின் நண்பன் பணப்பாக்கம் ராஜசேகர்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தினேஷ், கோபியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி செல்போன், பணத்தை பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது
இதனையடுத்து போலீசார் பிரசாந்த், விஷ்ணுவை கைது செய்தனர். 

மேலும் செல்போனை வைத்திருக்கும் இராஜசேகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.