குறள் : 412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
மு.வ உரை :
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
கலைஞர் உரை :
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை :
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
Kural 412
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum
Explanation :
When there is no food for the ear give a little also to the stomach
இன்றைய பஞ்சாங்கம்
12-06-2021, வைகாசி 29, சனிக்கிழமை, துதியை திதி இரவு 08.18 வரை பின்பு வளர்பிறை திரிதியை. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.57 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சனி ப்ரீதி நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 12.06.2021
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்
இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புது புது மாற்றங்களால் நற்பலன்கள் கிட்டும்.
சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.
கன்னி
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
தனுசு
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மகரம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
மீனம்
இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,